Subscribe Us


 

கொரோனா வைரஸும் - இந்தியாவில் அதன் தாக்கமும்

கொரோனா  வைரஸும் - இந்தியாவில் அதன் தாக்கமும்

        

சீன நாட்டின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்து கொண்டிருந்த போது, இந்தியாவில் 30 ஜனவரி 2020 அன்று முதல் கொரோனா வைரஸ் தொற்று கேரளா மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. தொற்று கண்டறியப்பட்ட நபர் சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்தியாவில், குறிப்பாக டில்லி, மும்பை, பெங்கலூர், ஹைதராபாத் மற்றும் பாட்னா மாநிலங்களில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

        

இந்தியாவில் மார்ச் 12, 2020 அன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் இறப்பு கர்நாடக மாநிலத்தில் உறுதிசெய்யப்பட்டது .

        

இந்தியாவில் இதுவரை 336 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு

        

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மார்ச் 19, 2020 அன்று, டெல்லியில் உள்ள அனைத்து உணவகங்களையும் மூடுவதாக அறிவித்தார். உணவகங்களில் சாப்பிடுவதற்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டு, உணவு விநியோகம் தொடரும் என அறிவித்தார். மேலும் 20ற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூடுவது அனுமதிக்கப்படாது எனவும் அறிவித்தார். மார்ச் 20 அன்று லக்னோவில் அனைத்து உணவகங்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

        

மார்ச் 22 அன்று இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பேச்சிற்கு இணங்க இந்திய தன் முதல் 14 மணி நேர தன்னார்வ ஊரடங்கை கடைபிடித்தது. வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பின் அறிவிவிக்கப்பட்டது.

        

பின் ஏப்ரல் 14ம் தேதி, பிரதமர் நாடு தழுவிய ஊரடங்கை மே 3 வரை நீட்டிப்பதாக அறிவித்தார். கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் மே 3 முதல் கணிசமான தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கணிசமான தளர்வுகளுடன் ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்து.

வாழ்வாதாரம் பாதிப்பு

        

ஊரடங்கு அமல்படுத்தப்பட பிறகு பெரும் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரம், குறிப்பாக நடுத்தரம், தினக்கூலி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டது ஒருபுறம் இருப்பினும், தினக்கூலியை நம்பி வாழ்க்கை நடத்தும் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் போன்றோரின் வருமானம் கேள்விக்குறியானதால் அவர்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

        

இந்த காலகட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் இலவச அரிசி போன்றவற்றை வழங்குவதின் மூலம் மக்களின் துயரம் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது என்றே கூறலாம்.

வேலைநீக்கம் 

பெரும் நோய்த்தொற்றின் காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டதில் அந்த நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருமானம் முற்றிலும் இல்லாமல் போனது. இதன் எதிரொலியாக சுமார் 10,000 பேர் பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக ஐடி நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும். இதில் ஸ்விக்கி, ஓயோ , புக் மை ஷோ (SWIGGY, OYO, BOOK MY SHOW) போன்ற கம்பனிகளும் அடக்கம்.

பணிநீக்கம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அதிகபட்சமாக ஓயோ நிறுவனம் 18% பணியாளர்களை பணிநீக்கம் பணிநீக்கம் செய்துள்ளது. இவ்வாறு பெரும் நிறுவனங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையால் பலருக்கு இது அச்சுருத்தமாக அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பணிநீக்கம் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு வருகிறது.

நோய் தொற்றின் பாதிப்பு குறையாத நிலையிலும் , இன்னும் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், வேலை பறிபோனவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும் நிறுவனங்களின் நிலையே இப்படி இருக்கும் பட்சத்தில், தொடக்க நிறுவனங்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பெரும்பாலான தொடக்க நிறுவனங்கள் வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் முற்றிலும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள்

        ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்ட பிறகு அதிகமாக பாதிப்பிற்கு உள்ளானது புலம்பெயர் தொழிலாளர்களே. ஊரடங்கு தேதி அறிவிக்கப்பட்டவுடன் அணைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் அவர் அவர் ஊர்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.  இதன் காரணமாக பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர். அதில் பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்த வழி நடைபயணம். ஆம், பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைவழி பயணமே மேற்கொள்ள நேர்ந்தது. இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். இவர்கள் நடைபயணம் மேற்கொள்ள ஒரே ஒரு கரணம் அவர்களுக்கு தங்கள் ஊர்களுக்கு செல்ல போதிய பணம் இல்லாமல் போனதே. இதில் சிலர் மரணம் அடைந்ததும் வேதனைக்குரியது.

ஆகமொத்தத்தில் இந்த வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை. அனைவரும் அவரவர் நலன் காக்க அரசாங்கம் கூறும் வழிமுறைகளை கேட்டு தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும்.

By
Dhruv Dev Dubey
Writer, Tranator, Designer, and HR Business Consultant

Post a Comment

0 Comments