Subscribe Us


 

சிவப்பு பூனை !

சிவப்பு பூனை !

அழகான மாலை நேரம் அது ,மேகம் மழையாக பொழிய காத்திருந்த காலம் அது , பூக்களும் பூத்து குலுங்க ! மெல்லிய காற்றில் தேவதை போல் ஒரு பெண் அங்கு வந்தால், அவள் அந்த இடத்தில் குளத்தில் இருக்கும் தாமரை போல அங்கிருந்த மரத்திலே நடு மரத்தின் அருகே வீற்றாள். திடீரென வீற்றவள் தடுமாறி எழுந்தாள் , பச்சபிள்ளை போல ! பார்த்தாளோ  வரும் கொள்ளை ! வெள்ளை நிற தோலோடு மேலும் கீழும் பார்த்தது ஒரு பூனை , பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்க கையில் வைத்திருந்த சிறு பன்னை அந்த பூனைக்கு உணவாக கொடுத்தாள், பன்னை உண்டதோடு அல்லாமல் மகிழ்ச்சியில் பூனையோடு கொஞ்சி விளையாடிக் கொண்டு வீடு திரும்பினால் . அடுத்த நாள் அதே இடத்திற்கு பூனையை தேடி வந்தால் அவள் , அப்போது யாரும் கண்டிராத கொடூர பல்லுடன் ,கோரான கூர்மையான நகத்துடன் பார்த்தால் அச்சுருத்தும் வகையில் மிக மோசமாக ஒரு நாய் முன் வந்து குலைக்க ஆரம்பித்தது என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் அவள்  திடுக்கிடும் நேரத்தில் அந்த பூனை வந்து நாயின் மீது பாய்ந்தது , பூனை நாயுடன் மோத அவள் யாரயாவது கூப்பிடலாம் என வேகமாக ஒடினால், திரும்பி அவள் ஆட்களை கூட்டி வருகையில் வெள்ளை பூனை முழுவதும் கடிபட்டு இரத்தத்தால் சிவப்பு பூனையாக கிடந்தது, ஒரு பன்னிற்காக ஒரு பெண்ணிற்கு தன்னை அற்பனித்தது.

அறிவுறுத்தல் :

இன்று மனிதநேயம் பெயரளவு கூட நம் மனிதரித்தில் இல்லை ஒரு பொருளை பெறுவதற்கும் பல பேர்களை சுயநலத்திற்காக  ஏமாற்றுவதில் திரிகிறோம் ஆனால் ஒரு பூனை சிறு பன்னிற்காக தன்னை அற்பனித்து அது சிறப்பை நம் முன் உயர்த்தி அது மூலம் பல விஷயம் உணர தூண்டியுள்ளது.
                              எழுத்தாளர்
                        Dhruv Dev Dubey 🌹

Post a Comment

0 Comments